
பச்சை கிளியாம் இது, நன்கு பாடும் கிளியாம்
இச்சை கொண்டு வந்ததாம் மணக்கும் மாஞ்சோலைக்கு
வந்த வழி தெரியவில்லை... போகும் வழி புரியவில்லை
தப்பிச்செல்ல இடமுமில்லை... தாவித்திரிய சிறகுமில்லை
இரவு பல வந்தன.... விடியல் பல மங்கின...
இருளென்னும் சிறையிலிட்டுதனிமையெனும் விலங்கு பூட்டி
கண்ணீர் செய்யச்சொல்லுதடா.... விதி....
காலம்.... விதியை வெல்லுமடா... இது ஒரு நியதி
கண்ணுக்கு தெரியாத கண்ணீரும்
காதுகளுக்கெட்டாத விம்மல்களும்
சொல்லத்துடிக்கும் பொழுது, கேட்க காதுகளில்லை
காதுகளிருக்கும் பொழுது, சொல்ல வார்த்தைகளில்லை
இருளின் ஒளியில்....
இரவின் மடியில் ஒரு ஈரத் தலையணை
கண்ணீர் வற்றும் முன் விடியல் எழுகிறது
தலையணை ஈரம் காயும் முன் பகல் மறைகிறது
ஓர் இரவு "போதும் நிறுத்து" என்று ஒரு ஒலி
கடவுளின் அசரீரியோ என்று எண்ணுவதற்குள்....
தலையணை பேசத்தொடங்கியது.....
"கடல் வாழுயிரினமில்லை நான்..... உப்பு நீரில் வாழ்வதற்கு"
புரிந்தது கிளியின் மரமண்டைக்கு....
தலையணையின் தயவும் இல்லையென்று......
1 comment:
You must be in deep pain i guess. sorry
Post a Comment