Tuesday, November 25, 2008

கனவுகள் தொலைவதில்லை


ரஞ்சனி, கல்லூரி தலைமை ஆசிரியர் வருவதற்கு சற்று நேரம் ஆகும் என்று அலுவலக பெண்மணி கூறியதால் ஒரு மரத்தடி பெஞ்சில் அமர்ந்தாள். காத்துகொண்டிருந்த நேரத்தில் ரஞ்சனி தன் கடந்த கால வாழ்க்கையை அசை போடத்தொடங்கினாள். சுரேஷ் ஒரு பொறியியல் பட்டதாரி. பெண் பார்க்க வந்த தினத்தன்று நீல நிற சட்டை போட்டிருந்தான். ரஞ்சனிக்கு பிடித்த வண்ணம் நீலம். அவள் மனது வேகமாக துடித்தது. தனிமையில் பேச அவன் அனுமதி கேட்ட பொழுது அவள் சற்றும் தாமதிக்காமல் தலையசைத்தாள். சிறுது நேரம் விருப்பு வெறுப்புகள் பற்றி பேசிய பின் ரஞ்சனி தன் மேற்படிப்பு பற்றிய ஆசையை தெரிவித்தாள். அவனோ சிறிது தயங்கிய பின் "பார்க்கலாம்" என்றான். தன் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ரஞ்சனி, சுரேஷை நிராகரித்தாள். இரண்டு மாதங்களுக்குப்பின் ரகுவின் வரன் வந்தது. பெண் பார்க்க வரும் முன்பே ரஞ்சனி ரகுவிடம் தொலைபேசி உரையாடலின்போது, ரகு அவளது மேற்படிப்புக்கு சம்மதம் தெரிவித்த பின்னரே, தன்னை பெண் பார்க்க வருவதற்கு சம்மதித்தாள். திருமணம் முடிந்து சில மாதங்கள் உருண்டன. ரகு அவள் படிப்பு பற்றி பேச முற்படும் பொழுது அவன் பேச்சை மாற்றுவான். ஒரு நாள், முடிவாக படிக்க கூடாது என்று சொல்லிவிட்டான். தன் கனவுகள் தொலைந்ததென எண்ணி, கல்யாணத்திற்கு முன்னதாக செலுத்திய முன் பணத்தை திரும்பிப்பெற ரஞ்சனி கல்லூரிக்கு சென்றிருந்தாள். தொலைவில் ஒரு நீல சட்டை தென்பட்டது. அது சுரேஷ் பெண் பார்க்க வந்த அன்று அணிந்திருந்த சட்டை. பக்கத்தில் ஒரு பச்சை புடவை. அதுவும் அவளுக்கு பரிச்சயமான ஒருவர் தான். அவர்கள் நெருங்கியதும் அந்த பெண் ரேகா என்று கண்டு கொண்டாள். சுரேஷை தன் கணவரென அறிமுகப்படுத்திய பின், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வர தாமதம் ஆவதால் தன்னை மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க சுரேஷ் அழைத்து வந்ததை கூறி விடை பெற்று சென்றாள் ரேகா.

ரஞ்சனி சுயநினைவு திரும்பியவளாய் தனக்கு தானே கூறிக்கொண்டாள் "கனவுகள் தொலைவதில்லை ஆனால் தொலைக்கபடுகின்றன"


2 comments:

rock savvy said...

Nice story, but it needs a little more expression. I don't get the feel when reading it.
"ஒரு நாள் முடிவாக படிக்க கூடாது என்று சொல்லிவடான்."correct this mistake. Read proof before publishing.

Harish said...

hey u express better in both the languages. jus try making d tamil entries properly cut into small paragraphs too...it wud give a better readability :)

regd. the entry its just a gr8 msg!